No products in the cart.
கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் உயிரிழந்த வழக்கு: சமீபத்திய தகவல்
Human smuggling conviction upheld in death of Indian family: இந்தியக் குடும்பம் ஒன்று கனேடிய எல்லையில் பலியான வழக்கில் குற்றவாளி ஒருவரின் மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.கனடா அமெரிக்க எல்லையில் இந்தியக் குடும்பம் ஒன்று பனியில் உறைந்து பலியான வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள விடயம் நினைவிருக்கலாம்.அந்த வழக்கில், குற்றவாளிகள் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தார்கள்.2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் திகதி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த, ஜகதீஷ் பட்டேல் (39), அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியின்போது, கனடா அமெரிக்க எல்லையில், பனியில் உறைந்து பரிதாபமாக பலியானார்கள்.















