கனடா

கனடாவின் எஸ்பனோலாவில் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள எஸ்பனோலா பகுதியில் சோதனை ஆணை ஒன்றை நிறைவேற்றிய காவல்துறையினர், உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரைக் கைது செய்து அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.ஒன்டாரியோ மாகாணக் காவல்துறையின் மோப்பநாய் பிரிவு மற்றும் சிறப்புப் படைகள் இணைந்து, கடந்த அக்டோபர் 14 அன்று செகண்ட் அவென்யூவில் உள்ள ஒரு வீட்டில் ‘கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் பொருட்கள் சட்டத்தின்கீழ்’ அதிரடிச் சோதனை நடத்தினர்.தோராயமாக 600 டாலர் மதிப்புள்ள கொகைன் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள், 600 டாலர் ரொக்கப் பணம், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் ஒரு ஷாட்கன் துப்பாக்கி, இரு துப்பாக்கிகளுக்குமான தோட்டாக்கள், டிஜிட்டல் எடைத் தராசுகள், போதைப்பொருள் பொதியிடும் பொருட்கள் மற்றும் ஒரு கைப்பேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

கியூபெக் சிறைச்சாலைக்குள் டிரோன் மூலம் உணவு விநியோகம்

கியூபெக் மாகாணத்தில் உள்ள ஒரு அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலைக்கு, டிரோன் மூலம் மெக்டொனால்டு உணவுகள் மற்றும் மதுபானம் ஆகியவை கைதி ஒருவரின் செல் ஜன்னல் வழியே விநியோகிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மெக்டொனால்டு நக்கெட்ஸ்,…