No products in the cart.
இலங்கையில் குழந்தைகளை பாதிக்கும் தலசீமியா!
இலங்கையில் 2,000 முதல் 2,500 குழந்தைகள் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 40 முதல் 50 குழந்தைகள் தலசீமியா நோயாளிகளாக அடையாளம் காணப்படுவதாக அந்த அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் சமித்தி சமரக்கோன் தெரிவித்தார்.
இன்று உலக தலசீமியா தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டார். அதேவேளை நாட்டில் சுமார் 500,000 பேருக்கு தலசீமியா நோய் அறிகுறிகள் இருப்பதாகவும் கூறினார்.
“தலசீமியாவுடன் சமூகங்களை ஒன்றிணைத்தல், நோயாளிகளை முதன்மைப்படுத்துதல்” இந்த ஆண்டு தலசீமியா தினத்தின் தொனிப்பொருளாக காணப்படுகின்றது.