இலங்கை

தேசபந்துவுக்கு விசாரணை குழுவால் அழைப்பு

எதிர்வரும் மே 19 ஆம் திகதி விசாரணைக் குழுவில் ஆஜராகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தமது அதிகாரத்தை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பில் விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட ‘விசாரணைக் குழு’ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளுக்காக குழுவின் முன்னிலையில் ஆஜராகுமாறு தேசபந்து தென்னகோனுக்கு அந்த குழு விடுத்துள்ள முதலாவது அழைப்பு இதுவாகும். 

இந்த விசாரணைகளுக்காக குறித்த குழு தற்போது சில நாட்களாக பாராளுமன்ற வளாகத்தில் கூடி வருகிறது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…