இந்தியா

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுப்பு

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்துச் செய்த விவகாரத்தில் தலையிட உலக வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பில் உலக வங்கி தலைவர் அஜய் பங்கா தெரிவித்திருப்பதாவது,

“சிந்து நதி நீர் பங்கீட்டு ஒப்பந்தத்தில் உலக வங்கி தலையீட்டு பிரச்சனையை சரிசெய்யும் என்று ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவை முட்டாள்தனமானவை. ஏனெனில் இந்த விடயத்தில் உலக வங்கி மத்தியஸ்தராக மாத்திரமே செயல்பட்டது.

சிந்து நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தம் என்பது இருநாடுகளுக்கு இடையேயான பிரச்சனை. அதில் மத்தியஸ்தராக மட்டுமே செயற்பட்டோம்.

அதில் தலையீடு செய்ய முடியாது” என கூறியுள்ளார்.

அஜய் பங்காவின் இந்த கருத்து பாகிஸ்தானுக்கு பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. அத்துடன் உலக வங்கி இந்தியாவிடம் இருந்து சிந்து நதிநீரை பெற்று தரும் என்று நினைத்த பாகிஸ்தானுக்கு இது பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…