No products in the cart.
புதிய பாப்பரசர் தேர்விற்கான முதல் வாக்குப்பதிவு நிறைவு
உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ள புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான ரகசிய வாக்கெடுப்பு நேற்று 07ஆம் திகதி தொடங்கியது.
வத்திக்கானின் சிஸ்டைன் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்குப் பிறகு, 133 கர்தினால்கள் போப்பின் தேர்தல் நடைபெறும் தேவாலயத்திலேயே தங்கி தங்கள் ரகசிய வாக்களிப்புகளைச் செய்தனர்.
கான்கிளேவ் அவையின் முதல் வாக்குப்பதிவில் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை எடுத்துரைக்கும் வண்ணம் கரும்புகை வெளியிடப்பட்டதாக வத்திக்கான் ஊடகம் செய்தி வௌியிட்டுள்ளது.
வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் ஏறக்குறைய 45,000 மக்கள் புதிய பாப்பரசர் தேர்விற்கான முடிவுகளை அறிய ஆவலுடன் காத்திருந்த போது, இரவு 9 மணியளவில் (உரோம் உள்ளூர் நேரப்படி) கரும்புகை வெளியிடப்பட்டு புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற விடயம் அறிவிக்கப்பட்டது.