இலங்கை

மர்ம தீயில் இளம் பெண் மரணம்

கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள வீட்டில் தனியாக இருந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர்.

அவரது உடல் முற்றிலுமாக எரிந்துவிட்டதாகவும், வீட்டின் சொத்து மற்றும் கூரைக்கு சேதம் ஏற்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த யுவதியின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் வெசாக்கைக் கடைப்பிடிக்க வீட்டை விட்டுச் சென்றிருந்தபோது, ​​தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுர தீயணைப்புத் துறையின் அதிகாரிகளும், அப்பகுதி மக்களும் வந்து தீயை அணைக்க நடவடிக்கை எடுத்தனர், ஆனால் அந்த இளம் பெண் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை  நுகேகொடை குற்றப்பிரிவு அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…