இலங்கை

08 தன்சல்கள் இடைநிறுத்தம்

முறையான சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றாத 8 தன்சல்களை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அறிவுறுத்தல்களுக்குப் பின்னர் மேலும் 17 தன்சல்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டதாக அதன் செயலாளர் சமில் முத்துக்குடா தெரிவித்தார்.

வெசாக் போயா பண்டிகையை முன்னிட்டு நேற்று 12 ஆம் திகதி நாடு முழுவதும் பல தன்சல்கள் ஏற்பாடு செய்யப்பட்டன அனைத்து தன்சல்களும் பொது சுகாதார பரிசோதகர்களால் மேற்பார்வையிடப்பட்டன.

இன்றைய தினமும் பரிசோதனை நடவடிக்கைகள் தொடரும் என பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…