ரம்பொடவில் மற்றுமொரு விபத்து

ரம்பொடவில் பாடசாலை ஒன்றுக்கு அருகில் வேன் ஒன்று கவிழ்ந்து இன்று (14) விபத்து ஏற்பட்டுள்ளது. 

கெரண்டிஎல்லவில் பயங்கர பேருந்து விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

விபத்தில் காயமடைந்த 12 பேர் தற்போது கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இருப்பினும், அவர்களுக்கு லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version