கிரிக்கட்விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முகமது ஷமி?

உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.

ஏற்கனவே ரோகித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் கோலியின் ஓய்வு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனிடையே ரோகித், கோலியை தொடர்ந்து முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போகிறார் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக வெளியான செய்திகளை முகமது ஷமி மறுத்துள்ளார்.

தான் ஓய்வு பெறுவதாக வெளியான கட்டுரையின் ஸ்கிரீன் ஷாட்டை முகமது ஷமி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டார். அந்த ஸ்டோரியில்,

‘ரொம்ப நல்லா இருக்கு மஹாராஜ். உங்க வேலை நாட்களையும் எண்ணிப் பாருங்க, இன்னும் எத்தனை நாளுக்கு உங்கள் வேலை இருக்கும். இது போன்ற கதைகளால் நீங்கள் உங்கள் எதிர்காலத்தை பாழாக்கிவிட்டீர்கள்’ என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஜூன் 20 ஆம் திகதி இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் விளையாட முகமது ஷமி தயாராக உள்ளார் என்பதை அவர் இதன்மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

What's your reaction?

Related Posts

குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐ.பி.எல். தொடரின் 56 ஆவது லீக் ஆட்டம் மும்பையில் நடந்தது. இதில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. நாணய சழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவரில் 155 ஓட்டங்களை…