இலங்கை

அடுத்த ஆண்டு முதல் பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகள் அறிமுகப்படுத்தப்படும்!

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொதுப் போக்குவரத்திற்காக பேருந்துகளை இறக்குமதி செய்யும் போது பல நிபந்தனைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 

நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், பாதுகாப்பான மற்றும் நவீனமான பேருந்துகளை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

பொதுப் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின் கீழ் இயங்குகின்றனவா? என்பதை ஆராயும் பணிகள் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…