இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்த உத்தரவு!

கொட்டாஞ்சேனை மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸார் மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. 

பம்பலப்பிட்டி மற்றும் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும், சிறுமி பயின்ற பாடசாலை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரும் நேற்று முன்தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் ஆஜரானபோது இந்தத் தகவல் வழங்கப்பட்டதாக அதன் ஊடகப் பேச்சாளர் நிஹால் சந்திரசிறி தெரிவித்தார்.

அன்று ஆணையத்தில் ஆஜராகாத சிறுமியின் பாடசாலை அதிபர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியரிடம் மனித உரிமை ஆணைக்குழுவின் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்காததற்கான காரணங்களைக் கேட்கவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைக்குப் பிறகு தனது பரிந்துரைகளை வழங்குவதாக மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…