இலங்கை

“தேசிய வெற்றி கொண்டாட்டம்” ஜனாதிபதி தலைமையில்..!

யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாளை நடைபெறும் “தேசிய வெற்றி கொண்டாட்டத்தில்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பங்கேற்பார் என்று இராணுவ வீரர்கள் சேவை அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் என்று அதன் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கோஹோன தெரிவித்தார்.

யுத்த வெற்றியின் 16வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் “தேசிய வெற்றி கொண்டாட்டம்” நாளை (19) நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டையில் உள்ள இராணு வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு முன்பாக மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறவுள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…