No products in the cart.
நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் – வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை!
நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் நானுஓயா தொடக்கம் நுவரெலியா வரையிலும், நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் நுவரெலியா முதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் நுவரெலியாவிலிருந்து பம்பரக்கலை வரையிலும் இந்த பனிமூட்டம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பனிமூட்டமான நிலையின் போது வீதிகளில் வாகனம் சாரதிகள் அவதானமாக வாகனத்தைச் செலுத்துமாறு நுவரெலியா காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.