No products in the cart.
நாள்களில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 500 இற்கும் மேற்பட்டோர் காசாவில் பலி
காசாவில் கடந்த 3 நாள்களில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் சுமார் 500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் தொடர்ந்து மறுகல் நிலை அதிகரித்த வண்ணமே உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த போரில் கொல்லப்பட்ட பலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை இதுவரை 60,000 ஐ கடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பப்பட்ட உணவு, மிக குறைந்த அளவே உள்ளே அனுமதிக்கப்பட்டு வந்தது.
இஸ்ரேல் மீது கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 3 ஆம் திகதி தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கவும், ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்கிறேன் எனவும் இஸ்ரேல் தீவிரமான போரை கையில் எடுத்திருக்கிறது.
இந்த போர் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் நடந்து வருகிறது.ஆனால் ஹமாஸை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்படி இருக்கையில்தான் காசா பகுதியை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்வதாக நெதன்யாகு அறிவித்திருக்கிறார்.
சரி இந்த பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று கேட்டால், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார். ஆனால் ஹமாஸ் முற்றிலுமாக காசாவை விட்டு வெளியேற வேண்டும், காசா ஆயுதம் இல்லாத பகுதியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை நெதன்யாகு விதித்துள்ளார்.
இவ்வாறான பின்னணியில் இந்த பிரச்சனையை ஈரான் உற்று நோக்கி வருகிறது. ஹமாஸுக்கு ஆதரவாக ஈரானின் ஹவுதி குழுக்கள் தாக்குதலை மேற்கொண்டு வந்தன.இப்போது ஹமாஸை இஸ்ரேல் நெருக்குவதால், இதில் ஈரான் தலையிடவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.