கனடா

உக்ரைன் முன்னாள் அதிபரின் ஆலோசகர் ஸ்பெயினில் சுட்டுக்கொலை

உக்ரைன் முன்னாள் அதிபா் விக்டா் யானுகோவிச்சின் உதவியாளராக இருந்தவரும், 2014-ஆம் ஆண்டில் அவருடன் ரஷியாவுக்கு தப்பிச் சென்றவருமான ஆண்ட்ரி போா்னோவ் (51) ஸ்பெயினில் புதன்கிழமை மா்ம நபா்களால் சுட்டுக்கொல்லப்பட்டாா்.

உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ்.சுட்டுக் கொலைகடந்த 2010 முதல் 2014 வரை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.

விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார்.மேலும் உக்ரைனில் 2014-ம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே ஆண்ட்ரி போர்ட்னோவ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த தகவலை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…