இலங்கை

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல்!

நாட்டிலுள்ள அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.இதன்படி, உள்ளூராட்சி சபைகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் குறித்த தகவல்களை உடனடியாக வழங்குமாறு அனைத்துக் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி தகவல்கள் கிடைத்தவுடன், உறுப்பினர்களின் பெயர்களை உள்ளூராட்சி சபைகளின் விபரங்களுடன் வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்காத அனைத்து வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் 27 ஆம் திகதிக்கு முன்னர் அந்த அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க கேட்டுக்கொண்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…