கனடா

தனது அந்தரங்க படத்தை அவையில் காட்டிய டிரம்ப் கட்சி எம்பியால் அதிர்வலை!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் குடியரசு கட்சியின் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினரான நான்சி மேஸ், அதனது நிர்வாணப் படத்தை அவையில் காட்டிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

அந்தப் புகைப்படத்தைக் காட்டி, தனக்கு வருங்காலக் கணவராக வர இருந்தவர் தனது அனுமதியின்றி ரகசியமாக தன் புகைப்படங்களை எடுத்ததாகக் நான்சி கூறினார்.தனது அனுமதியின்றி ரகசியமாக எடுத்த புகைப்படம்இந்த சம்பவம் நேற்று முன் தினம் (20) ஹவுஸ் மேற்பார்வைக் குழுவின் அமர்வின் போது நடந்தது. அவைக் கூட்டத்தில் நான்சி மேஸ் Video voyeurism-க்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற வலியுறுத்தி பேசும்போது தனது நிர்வாண புகைப்படத்தை எடுத்துக் காட்டினார்.

அந்த படம் தனது அனுமதி இன்றி வீட்டில் வைத்து தனக்கு கணவராக வர இருந்த பேட்ரிக் பிரையன்ட் எடுத்தது என்று தெரிவித்தார். மேலும் சுதந்திரம் என்பது ஒரு கோட்பாடு அல்ல.நீங்கள் தூங்கும்போது உங்கள் அனுமதியின்றி யாரும் உங்கள் படத்தை எடுக்க முடிந்தால் பின் அது சுதந்திரம் கிடையாது என தெரிவித்த அவர், நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக மட்டுமல்ல, ஒரு பாதிக்கப்பட்டவராகவும் பேசுகிறேன்’ என்று தெரிவித்தார்.

Video voyeurism என்பது ஒரு தனிநபரின் அனுமதியின்றி தனிப்பட்ட பகுதியில் அவரைப் பதிவு செய்யும் செயலாகும். அதுமட்டுமல்லாது தனது முன்னாள் வருங்கால கணவர் பேட்ரிக் பிரையன்ட் தன்னை ரகசியமாக படம் பிடித்தது மட்டுமல்லாமல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் செய்ததாக நான்சி மேஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…