இலங்கை

மருந்துச் சீட்டு இல்லாமல் பெருமளவிலான மருந்துகளை வேனில் கொண்டு சென்ற பெண் கைது

சிலாபம் – புத்தளம் பிரதான வீதியில் வேனில் பெருமளவிலான மருந்துகளை கொண்டு சென்ற 29 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்துகளை கொண்டு சென்ற குற்றத்திற்காக பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்தெதுரு-ஓயா வீதிக்கு அருகில் பொலிஸார் சோதனையில் ஈடுப்பட்ட போது வேனில் பயணித்த குறித்த பெண்ணிடமிருந்து 64 பெட்டிகள் அடங்கிய மருந்துகளை பொலிஸார் கைப்பற்றினர்.

இந்த வியடம் தொடர்பில் பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பெண் வழங்கிய பதில் குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த பெண்ணை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் மருந்துகளையும் வேனையும் பறிமுதல் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…