No products in the cart.
கனடாவில் மோசமான செயலில் ஈடுபட்ட 72 வயதான சீனப் பிரஜைக்கு சிறை
கனடாவின் ப்ரிடிஷ் கொலம்பியாவிலிருந்து – ஹாங்காங்குக்குச் செல்லவிருந்த பயணப் பொதிகளில் 40 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் மெத்தாம்பெட்டமின் (methamphetamine) கடத்த முயன்ற 72 வயதுடைய யுன் சுவேன் வாங் (Yun Chuen Wong) என்ற சீனப் பிரஜைக்கு தண்டனை வீக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சிறையில் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.தண்டனை முடிந்ததும் அவர் ஹாங்காங்குக்கு நாடுகடத்தப்படுவார் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.2023 ஆண்டில் வான்கூவர் விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாகவும் அவற்றை விற்பனை செய்ய முயன்றதாகவும் குறித்த வயோதிபர் ஒப்புக் கொண்டுள்ளார்.சீனப் பிரஜையான வாங், , கைது செய்யப்படுவதற்கு 12 நாட்களுக்கு முன் ஹாங்காங்கிலிருந்து வான்கூவருக்கு சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.