விளையாட்டு

15 வருட சாதனையை முறியடித்த சூர்யகுமார்

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் மும்பை – பஞ்சாப் அணிகள் விளையாடி வருகிறது. இதில் நாணய சழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 184 ஓட்டங்கள் பெற்றது. அதிகபட்சமாக சூர்யகுமார் 57 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

184 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவர்கள் நிறைவில் 187 ஓட்டங்களை பெற்று 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடப்பு தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சூர்யகுமார் யாதவ் 619 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதன் மூலம் 15 வருட சச்சினின் சாதனையை சூர்யகுமார் முறியடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு சச்சின் 618 ஓட்டங்கள் எடுத்ததே ஒரு சீசனில் மும்பைக்காக எடுத்த அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

மும்பை அணிக்காக ஒரு சீசனில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள், 619 – சூர்யகுமார் யாதவ் (2025) 618 – சச்சின் டெண்டுல்கர் (2010) 605 – சூர்யகுமார் யாதவ் (2023) 553 – சச்சின் டெண்டுல்கர் (2011) 540 – லென்டில் சிம்மன்ஸ் (2015) 538 – ரோஹித் சர்மா (2013)

What's your reaction?

Related Posts

WTC 2025 இறுதிப்போட்டி – தென்னாபிரிக்கா அணிக்கான வெற்றி இலக்கு இதோ!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2025 இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு 282 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி ஜூன் 11 முதல் 15 வரை லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது, இதில் அவுஸ்திரேலியா மற்றும் தென்…