இலங்கை

சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளுக்கு1,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

சீரற்ற வானிலை காரணமாக சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பேரிடர் காரணமாக முழுமையாக சேதமடைந்த வீட்டிற்கு 2.5 மில்லியன் ரூபாவும், பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு சேதத்தின் அளவிற்கேற்ப இழப்பீடு வழங்கப்படும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் மேலதிக செயலாளர் கே.ஜி.தர்மதிலக தெரிவித்தார்.

பேரிடர் காரணமாக உயிரிழந்த ஒவ்வொருவருக்கும் 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை பேரிடரால் ஊனமுற்ற ஒருவருக்கு 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…