இலங்கை

வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். 

வீட்டு வேலைக்கு அல்லாத வெளிநாடுகளுக்குச் செல்லும் போது தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்தார். 

இலங்கைத் தூதரகங்கள் இயங்காத நாடுகளுக்கு செல்வோர் குறித்த வேலைவாய்ப்பு ஒப்பந்தங்களை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதான அலுவலகம், பணியக விமான நிலைய காரியாலயம் அல்லது மாவட்ட கிளை அலுவலகங்களில் அனுமதி பெறப்படுதல் வேண்டும். 

2025 ஜூன் 7ஆம் திகதி முதல் இம்முறையானது நடைமுறைக்கு வரும் எனவும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…