No products in the cart.
டொரோண்டோவில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து கொண்டவர் கைது
டொரோண்டோவில் நடைபெற்ற ஆரம்பப் பள்ளி கால்பந்து போட்டி ஒன்றின் போது, குழந்தைகளிடம் சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்ட ஒரு 35 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.
35 வயதான லியாண்ட்ரோ டி சொய்சா பார்போசா (Leandro De Souza Barbosa) என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் சிறுவர்களிடம் அநாகரீகமான வகையில் நடந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தைகளை தேவையின்றி அலைபேசியில் படமெடுத்தார் எனவும் அவர்களை தூக்கினார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை மாணவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.