கனடா

புற்றுநோயாளிகள் குறித்து கனடிய ஆய்வில் அதிர்ச்சி தரும் முடிவுகள்!

புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பில் கனடிய ஆய்வாளர்கள் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

புத்துணர்வூட்டும் உடற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்ற பெருங்குடல் புற்றுநோயாளிகளுக்கு, நோய் மீண்டும் ஏற்படும் அபாயம் 28% குறைந்துள்ளது என கனடாவில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு நியூ இங்லென்ட் ஜேர்னல் ஒப் மெடிசின் New England Journal of Medicine இதழில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

இந்த சர்வதேச ஆய்வின் இணைத் தலைவர் மற்றும் டொக்டர் கிரிஸ்டோபர் பூத் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

டொக்டர் பூத் கிங்ஸ்டன் ஹெல்த் சயின்ஸ் சென்டரிலும் குயீன்ஸ் பல்கலைக்கழகத்திலும் வைத்தியராக பணியாற்றுகிறார்.

புற்றுநோய் மீட்பு விகிதத்தை உயர்த்த உடற்பயிற்சி உதவுமா என்பது தொடர்பாக உலகிலேயே முதன்முறையாக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையே இது எனவும் அதன் முடிவுகள் திகைப்பூட்டும் வகையில் அமையப்பெற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடற்பயிற்சி குழுவில் இருந்த நோயாளிகள், மூன்று ஆண்டுகள் வரை உடற்பயிற்சி ஆலோசகர்களை (பிசியோதெரபிஸ்ட்/கினிசியாலஜிஸ்ட்/பர்ஸனல் டிரெயனர்) சந்தித்து, தங்களுக்கென திட்டமிடப்பட்ட உடற்பயிற்சி திட்டத்தில் பங்கேற்றனர்.

புற்றுநோய் மீளுமை அபாயம் – 28% குறைவு மொத்த உயிரிழப்பு அபாயம் – 37% குறைவு புற்று நோய் சிகிச்சைக்காக பெருந்தொகை பணம் செலவிடுவதனை விடவும் உடற் பயிற்சி மூலம் அதனை தவிர்த்துக் கொள்ள முயற்சிக்க முடிம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2009–2024 வரையிலான காலத்தில், 889 பெருங்கடல் புற்றுநோயாளிகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

முதலாவது ஆண்டில் இருவாரத்திற்கு ஒருமுறை ஆலோசனை மற்றும் பயிற்சி, பின்னர் மாதத்தில் ஒருமுறை வழிகாட்டல் வழங்கப்பட்டது. உடற் பயிற்சி மேற்கொண்ட நோயாளிகள் சிறந்த நலன்களை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…