இலங்கை

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குறித்த மாணவி குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.

அவர் தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார், மேலும் அவரது நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய குளியாப்பிட்டி பொலிஸார் , சம்பவம் தொடர்பாக தொழில்நுட்பக் கல்லூரியின் நான்கு மாணவர்களைக் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக இந்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குளியாப்பிட்டி பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…