இலங்கை

பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்த செயலணி

ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள பன்றி வளர்ப்பு கைத்தொழிலை மேம்படுத்தவதற்கான செயலணியை நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024 ஒக்டோபர் மாதம் பதிவான மிகவும் மேகமாக பரவிய தொற்று நோயான ஆபிரிக்க பன்றிக் காய்ச்சல் இலங்கையில் முதல் தடவையாக மேல் மாகாணத்தில் ஆரம்பித்து தற்போது அனைத்து மாகாணங்களிலும் பரவியுள்ளது.

குறித்த நோய் காரணமாக தொற்றுக்குள்ளான பண்ணை விலங்குகளின் மரண விகிதம் 100% வரை அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது. தற்போது பதிவாகியுள்ள தரவுகளுக்கமைய 1,594 பன்றிப் பண்ணைகளில் நோய் பதிவாகியுள்ளதுடன், 61,695 பன்றிகள் இறந்துள்ளன.

அத்துடன், குறித்த நோய் காடுகளில் உள்ள காட்டுப் பன்றிகளுக்கும் தொற்றி பெருமளவு காட்டுப் பன்றிகள் இறந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் அறிக்கை செய்துள்ளது. தற்போது நோய்ப் பரவல், நோய்க்காரணி வைரஸ் சுற்றாடலில் உலாவுதல் மற்றும் நோய் பரவல் தொடர்பான சரியான விஞ்ஞான ரீதியான தகவல்கள் இன்மை காரணமாக பன்றிப் பண்ணைகளை மீள ஆரம்பித்தல் மிகவும் ஆபத்தான நிலையாக மாறியுள்ளது.

எனவே, பன்றிக் கைத்தொழிலை மீண்டும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (அபிவிருத்தி நிர்வாகம்) இணைத் தலைமையிலானதும், தொடர்புடைய ஏனைய தரப்பினரின் பிரதிநிதித்துவம் கொண்ட செயலணியை நியமிப்பதற்கு விவசாய, கால்நடை வள, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…