கனடா

பெண்ணொருவரின் கொலை வழக்கில் கனடா நீதிமன்றம் எடுத்துள்ள வித்தியாசமான முடிவு

கனடாவின் மொன்றியலில், தன் புதிய காதலியுடன் சேர்ந்து தன் முன்னாள் மனைவியை கொலை செய்தாக நபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு மே மாதம், ஓட்னா (Odna Daudier, 32) என்னும் பெண் Rivière-des-Prairies என்னுமிடத்தில், தனது காரில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தற்போது ஓட்னாவின் முன்னாள் கணவரான ஜாக் (Jacques Adonai Charpentier) மற்றும் அவரது புதிய காதலியான மெலிஸ்ஸா (Mélissa Estimé) ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

விடயம் என்னவென்றால், ஓட்னா எப்படி உயிரிழந்தார் என்பது இதுவரை தெரியவில்லை. என்றாலும், அவரது முன்னாள் கணவரான ஜாக் மற்றும் அவரது காதலி குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

ஜாக்கும் ஓட்னாவும் பிரிந்தாலும், ஓட்னாவை விடமுடியாமல் அவரையே எப்போதும் பின்தொடர்ந்துள்ளார் ஜாக். ஆக, முன்னாள் மனைவியை விடமுடியாமல் தவித்த ஜாக், தனது காதலியுடன் சேர்ந்து அவரைக் கொல்ல முடிவு செய்துள்ளார்.

அதன்படி, உடற்கூறு ஆய்வில் கண்டுபிடிக்கமுடியாத ஒரு விஷத்தை ஓட்னாவுக்குக் கொடுத்து, அவரது காரிலிருந்த GPS மூலம் அவரைப் பின்தொடர்ந்து, அவரைக் கொன்று அவரது உடலை Rivière-des-Prairies என்னுமிடத்தில் போட்டுவிட்டதாக ஜாக் மற்றும் மெலிஸ்ஸா மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

CCTV கமெராக்கள் மற்றும் மொபைல் டேட்டா மூலம் அவர்களுடைய குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளார்கள்.

தம்பதியருக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர இயலாத வகையில் ஆயுள் தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's your reaction?

Related Posts

SC4K Scarborough கிளை நேற்று திறந்து வைப்பு – கணேடிய மாணவர்களுக்கு புதிய Coding வாய்ப்புகள்!

கனேடிய மண்ணில் 4 வயது தொடக்கம் 18 வயது வரையான மாணவர்களுக்கு Coding ஐ சிறந்த முறையில் கற்பித்து வரும் Scracth Coding for Kids (SC4K) இன் Scarborough கிளை அலுவலகம் 4168 Finch Ave East , Scarborough இல் நேற்றைய தினம் உத்தியோக பூர்வமாக திறந்து…