இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை – அடையாள அணிவகுப்பில் நடந்தது என்ன?

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க என்ற சந்தேக நபர் இன்று (4) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

அடையாளம் காண இரண்டு சாட்சிகள் ஆஜர்படுத்தப்பட்டனர், ஆனால் அவர்கள் சந்தேக நபரை அடையாளம் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் சந்தேக நபர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலியின் உத்தியோகபூர்வ அறையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

சந்தேக நபரை இந்த மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும், அன்றைய தினம் சந்தேக நபரை ஸ்கைப் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…