இலங்கை

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய ஷஷீந்திர

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷஷீந்திர ராஜபக்ஷ சுமார் 7 அரை மணிநேர வாக்குமூலம் ஒன்றை வழங்கியதன் பின்னர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியுள்ளார்.

இன்று (05) காலை 9 மணி அளவில் அவர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகினார்.

சீன நிறுவனத்திடம் இருந்து தரமற்ற கரிம உரக் கப்பலை இறக்குமதி செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இடம்பெற்றுவரும் விசாரணைகளுக்கு அமைவாக அவருக்கு வாக்குமூலம் வழங்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…