இலங்கை

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர் எம். ஆர் ஸ்ரீமதி மல்லிகா குமாரி சேனாதீர, இன்று (05) இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள வேருஸ் ஆறு திட்டத்தின் முதல் கட்டத்தின் திறப்பு விழாவிற்காக, கொள்முதல் நடைமுறைகளை மீறி ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்து அந்த நிறுவனத்திற்கு சலுகை வழங்கியதுடன், அந்த விழாவிற்காக திட்ட நிதியிலிருந்து எவ்வித பணமும் ஒதுக்கப்படாத நிலையில், திட்ட நிதியிலிருந்து 27.6 மில்லியன் ரூபாய் செலவு செய்து அரசுக்கு நட்டத்தை ஏற்படுத்தியதன் மூலம் “ஊழல்” எனும் குற்றத்தைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…