இலங்கை

முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது!

முறையாக பதவி விலகாது பணிக்கு சமூகமளிக்கத் தவறிய முப்படையைச் சேர்ந்த 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் முப்படைகளும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களில் 2,261 பேர் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளின் ஒழுக்கத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…