உலகம்

டொரரொன்டோவில் 15 வயது சிறுவன் துப்பாக்கிச் சூட்டில் பலி!

டொரொன்டோவின் மேற்கு பகுதியில் சனிக்கிழமை இரவு ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 15 வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

இச்சம்பவம் ஜெய்ன் வீதி மற்றும் எமெட் அவென்யூ அருகே உள்ள மவுண்ட் டென்னிஸ் பகுதியில் இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூட்டு காயத்துடன் 15 வயது சிறுவனை கண்டதாக தெரிவித்துள்ளனர்.
உடனடியாக அவசர மருத்துவ உதவிக்காக அழைத்துச் செல்லப்பட்ட அந்த சிறுவன் மருத்துவமனையில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

டொரொண்டோவில் இந்த ஆண்டு இதுவரையில் 14 கொலைச் சம்பவம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிச்சூடு நிகழ்ந்ததும் சந்தேகநபர் அந்த இடத்தை விட்டு தப்பிச் சென்றதாகவும், இதுவரை அவரை பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

What's your reaction?

Related Posts

ஹார்முஸ் நீரிணையை மூடுவது குறித்து ஈரானிடம் சீனா பேசவேண்டும்

ஈரான் இஸ்ரேல் நாடுகள் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.…