இலங்கை

போதை மாத்திரைகளுடன் பெண் கைது!


மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் போதை மாத்திரைகளுடன் பெண் உள்ளிட்ட இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மாவத்தகம – கைத்தொழில் பேட்டை சந்தி பிரதேசத்தில் மாவத்தகம பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில் வாரியபொல, யடிகந்துருவ பிரதேசத்தில் போதை மாத்திரைகளை விநியோகித்து வந்த பெண் சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கைதான சந்தேகநபரிடம் இருந்து 9,657 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக

சம்பவத்தில் ஈதனவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரும், இபலவ பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய பெண் சந்தேகநபர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவத்தகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…