இலங்கை

4ஆம் மாடிக்கு அழைக்கப்பட்ட கருணா தனக்கு பயமில்லை என்று பகிரங்க அறிவிப்பு!

மதுபானம் கொடுத்து வாக்குகளைப் பெற்ற தமிழ்க் கட்சி தமிழ்த் தேசியவாதிகளாம். நாங்கள் எல்லாம் துரோகிகளாம். பொறுத்துக் கொள்ள முடியாத அந்த சமூகம் தான் இன்று எம்மை துரோகிகளாக அடையாளப்படுத்துகிறது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன்(கருணா) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

என்னை பலமுறை சிஐடியில் விசாரணைக்கு அழைத்திருக்கின்றார்கள். நான்காம் மாடி வரை சென்று வந்திருக்கின்றேன். ஆனால் நான் ஒரு தடவைக் கூட பயந்ததில்லை. பயமுமில்லை. ஏனென்றால் நான் எந்த தவறும் இழைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஈஸ்டர் குண்டுத் தாக்குதலாக இருந்தாலும் சரி எந்த தாக்குதலாக இருந்தாலும் சரி நேர்மையான விசாரணைகளை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் எனவும் கருணா கேட்டுக் கொண்டுள்ளார்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…