No products in the cart.
துஷார உபுல்தெனியவிற்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய நாளைய தினம் (11) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று புதுக்கடை இலக்கம் 01 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேக நபரின் பிணை மனுவை நிராகரித்த நீதவான், தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதால் பிணை மனுவை பரிசீலிக்க முடியாது என்று கூறினார்.
அதன்படி, பிணை மனுவை நிராகரித்த மேலதிக நீதவான், வழக்கை நாளை நிரந்தர நீதவான் முன் விசாரணைக்கு அழைக்க உத்தரவிட்டார்.
அதுவரை, சந்தேக நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.