இலங்கை

சட்டவிரோத பிரவேசம் – 5 இலங்கையர்கள் இந்தியாவில் கைது

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற ஐந்து இலங்கையர்கள் இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகு மூலம் இந்தியாவின் ராமேஸ்வரம் கடற்கரையை அடைந்த இந்தக் குழுவினர், இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் இரண்டு சிறு குழந்தைகளும் இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஐந்து இலங்கையர்களையும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிறுவப்பட்ட மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

What's your reaction?

Related Posts

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகள், வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர்கள்…