No products in the cart.
அஹமதாபாத்தில் விமான சேவைகள் நிறுத்தம்!
அஹமதாபாத்தில் விமான சேவைகள் நிறுத்தம்!
எயார் இந்தியா விமான விபத்தை அடுத்து அஹமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஹமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பிற்பகல் 1.30 மணியளவில் புறப்பட்ட எயார் இந்தியா விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் வகையைச் சேர்ந்தது, இவ் விமானம் புறப்பட்டு சில நிமிடங்களிலேயே குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்தது. விமானத்தில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள் உள்பட 242 பேர் பயணித்துள்ளனர்.
விமான விபத்து குறித்து இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். மேலும், விமான விபத்து விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்புப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விமான விபத்தைத் தொடர்ந்து அஹமதாபாத்தில் விமான சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அஹமதாபாத் சென்ற இண்டிகோ விமானம் மீண்டும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
–