No products in the cart.
ஐ.சி.சி “ஹால் ஆஃப் பேம்” பட்டியலில்: எம்.எஸ்.தோனி!
ஐ.சி.சி “ஹால் ஆஃப் பேம்” பட்டியலில்: எம்.எஸ்.தோனி!
இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், நட்சத்திர துடுப்பாட்ட வீரரும், முன்னாள் கேப்டனுமான எம்.எஸ். தோனி ஐ.சி.சி யின் உயரிய “ஹால் ஆஃப் பேம்” பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார். இது இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐ.சி.சி “ஹால் ஆஃப் பேமில்” சேர்க்கப்பட்ட 11வது வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்கான தனது எண்ணிலடங்காத பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்ட தோனி, சர்வதேச அளவில் இந்திய அணிக்காக அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சேர்த்து 538 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் 17,266 ரன்கள் குவித்துள்ளார், ஒரு இரட்டை சதம், 16 சதங்கள் மற்றும் 108 அரைசதங்களும் அடங்குகின்றன.
மேலும் ஒருநாள் உலகக் கிண்ணம், ரி 20 உலகக் கிண்ணம் மற்றும் சம்பியன்ஸ் டிரொபியை வென்ற ஒரே ஒரு கெப்டனாகவும் இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.