இந்தியா

மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்

ஜூன் 12, அதாவது நேற்று அகமதாபாதில் நடந்த மிகப்பெரிய விமான விபத்தின் கோர காட்சிகளே இன்னும் மக்களின் மனதை விட்டு நீங்காமல் இருக்க, மற்றொரு ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறங்கியதாக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

தாய்லாந்து ஃபூகெட்டில் இருந்து டெல்லிக்குச் வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஒன்று வெள்ளிக்கிழமை அவசரமாக தரையிறங்கக் கோரியதாக ஃபூகெட் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

விமானம் AI 379 தரையிறங்கியதாகவும், விமான நிலையம் அவசரகால செயல்முறைகளை தொடக்கியுள்ளதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அவசரகால ப்ரோடோகால் படி, பயணிகள் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாக தாய்லாந்து விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். முதற்கட்ட தேடலுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் எந்த வித வெடிகுண்டு இருப்பதையும் அதிகாரிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது.

விமானத்தில் 156 பயணிகள் இருந்தனர் என்றும் விமானத்தின் உள்ளிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 9:30 மணிக்கு (0230) ஃபூகெட் விமான நிலையத்திலிருந்து இந்தியத் தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டது. ஆனால் அந்தமான் கடலைச் சுற்றி வந்து பின்னர் மீண்டும் தாய் தீவில் தரையிறங்கியதாக விமான கண்காணிப்பாளர் Flightradar24 தெரிவித்துள்ளது.

What's your reaction?

Related Posts

தொப்புள்கொடி உறவுகளுக்கு நல்லுறவுகளாக இருப்போம்: விஜய் தெரிவிப்பு!

உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் உறுதி ஏற்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் முள்ளிவாய்க்கால்…