No products in the cart.
இஸ்ரேலில் இலங்கை பெண்ணொருவர் காயம்
இஸ்ரேலின் டெல் அவிவ், ஐஃபா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதல்களில் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
எனினும் அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என இஸ்ரேலிய தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.
காயமடைந்த பெண் இஸ்ரேலின் பேட் யாம் பகுதியில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளது.
இதற்கிடையில், டெல் அவிவின் தெற்கே பணிபுரியும் ஒரு இலங்கைப் பெண்ணொருவரும் தான் பணிபுரியும் வீட்டில் ஏற்பட்ட நடுக்கம் காரணமாக அங்கிருந்து வெளியேறியதாகக் கூறப்படுகிறது.