இலங்கை

நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று (15) காலை நாடு திரும்பியுள்ளார்.

இந்த விஜயத்தில் ஜனாதிபதியுடன் சென்றிருந்த வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் ஆகியோரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அவர்கள் இன்று காலை 08.58 மணிக்கு டொஹாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ஜெர்மனிய ஜனாதிபதி பிராங்க்-வோல்டர் ஸ்டெய்ன்மியரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதியும் அவரது குழுவினரும் கடந்த 11 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தனர்.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…