உலகம்

அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் மின்னசோட்டா சட்டசபை உறுப்பினர்கள் இருவர் தங்கள் வீடுகளில் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸ் வேடமணிந்து வந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சட்டசபை உறுப்பினர் மெலிசா ஹார்ட்மேன் மற்றும் அவரது கணவர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மற்றொரு சட்டசபை உறுப்பினர் ஜான் ஹாப்மேன் படுகாயம் அடைந்தார். இவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக, ஆளுநர் டிம்.வால்ஸ் கூறுகையில், மின்னசோட்டாவில் நடந்த அரசியல் வன்முறைகளுக்கு எதிராக நிற்கவேண்டும். தாக்குதல் நடத்தியவர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதுகுறித்து அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப். பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டசபை உறுப்பினர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில், மின்னசோட்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் கொடூரமானது என கண்டனம் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இதுபோன்ற கொடூரமான வன்முறையை பொறுத்துக் கொள்ள முடியாது என கூறினார்.

What's your reaction?

Related Posts

சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம் டிரம்பின் அதிரடி திட்டம்

அமெரிக்க துறைமுகங்களில் சீன கப்பல்களை நிறுத்த, கட்டணம் விதிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி வரி விதித்து வருகின்றன. சீன பொருட்களுக்கு இதுவரை இருந்த 145 % வரியை 245 % ஆக…