இலங்கை

பாராளுமன்றம் ஒத்திவைப்பு

பாராளுமன்ற அமர்வுகள் இன்று பிற்பகல் 5.30 மணி வரை நடைபெறவிருந்த நிலையில், நாளை காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கத்தினால் இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள் தொடர்பிலான ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற்ற நிலையிலேயே இவ்வாறு பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா, இந்த விவாதத்திற்கான ஒத்திவைப்பு தீர்மானத்தை சபையில் முன்வைத்திருந்தார், ஆனால் இன்று (18) பிரேரணை விவாதிக்கப்பட்டபோது அவர் பாராளுமன்றில் இல்லை.

இதனால் இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாததால் நாளை (19) காலை 9.30 வரை பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி அறிவித்தார்.

What's your reaction?

Related Posts

காலி முகத்திடலில் மின்கம்பத்தில் ஏறி ஒருவர் போராட்டம்

காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான…