RELIGIOUS ANNOUNCEMENTSகனடா

கனடா சென்ற இந்திய பிரதமரை புகழ்ந்து பாராட்டிய இத்தாலி பிரதமர்

G7 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்பாராத தலைவர் ஒருவரிடமிருந்து பாராட்டு கிடைத்துள்ளது.

G7 மாநாட்டில் கலந்துகொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது.

கனடா சென்ற இந்திய பிரதமரை புகழ்ந்து பாராட்டிய இத்தாலி பிரதமர் | Italy Meloni Praise Indian Pm Modi In Canada G7

ஆனாலும் அவர் அதை ஏற்றுக்கொண்டு கனடா சென்றார். அவர் சென்றது பலவகையிலும் நன்மையாகவே முடிந்துள்ளது.

கனடா இந்திய உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுடன், எதிர்பாராத நாடுகளின் தலைவர்களிடமிருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது மோடிக்கு.

ஆம், G7 மாநாட்டில் இந்திய பிரதமர் மோடியை சந்தித்த இத்தாலி பிரதமரான ஜார்ஜியா மெலோனி, நீங்கள் தலை சிறந்தவர், உங்களைப்போல ஆக நானும் முயற்சி செய்துகொண்டிருக்கிறேன் என்று கூறும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

கனடா சென்ற இந்திய பிரதமரை புகழ்ந்து பாராட்டிய இத்தாலி பிரதமர் | Italy Meloni Praise Indian Pm Modi In Canada G7

அத்துடன், ட்ரூடோ ஆட்சியின்போது இந்தியாவை அவர் குற்றம் சாட்டிக்கொண்டிருக்க, தற்போதைய கனேடிய பிரதமரான மார்க் கார்னியோ, இந்திய பிரதமர் மோடியை புகழ்ந்து பேசியுள்ளார்.

’பிரதமர் மோடியின் வருகை, இந்தியப் பொருளாதாரத்தின் அளவு, செயலூக்கம் மற்றும் தொழில்நுட்ப வலிமையையும், உலகளவில் அதன் தலைமைப் பங்கையும் பிரதிபலிக்கிறது’ என்று கூறியுள்ளார் மார்க் கார்னி.

What's your reaction?

Related Posts

கனடாவில் ஓடும் போலீஸ் வாகனத்திலிருந்து தப்பித்த நபர் காயம்

கனடாவின் எல்ஜின் கவுண்டி பகுதியில், காவல்துறையின் காவலில் இருந்த நபர் ஒருவர் ஓடும் வாகனத்திலிருந்து தப்பித்து, பின்னர் காயமடைந்த சம்பவம் குறித்து மாகாணத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு (SIU) விசாரணையைத் தொடங்கியுள்ளது. சனிக்கிழமை மதியம்…