No products in the cart.
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவி திடீர் மரணம்
கனடாவுக்கு கல்வி கற்பதற்காக இந்தியாவிலிருந்து சென்றிருந்த ஒரு மாணவி திடீரென மரணமடைந்ததாக வான்கூவரிலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த தான்யா தியாகி, கனடாவிலுள்ள கால்கரி பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றுவந்தார்.
இந்நிலையில், தான்யா திடீரென மரணமடைந்ததாக வான்கூவரிலுள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவிலிருந்து கனடாவுக்கு கல்வி கற்கச் சென்ற மாணவி திடீர் மரணம் | Indian Student Tanya Tyagi
தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கால்கரி பல்கலையில் பயின்றுவந்த தான்யா தியாகியின் திடீர் மரணச் செய்தி கவலையை உருவாக்கியுள்ளதாகவும், அவரது குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய இருப்பதாகவும், அன்னாரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தான்யா எதனால் இறந்தார் என்பது குறித்து இந்திய தூதரகம் குறிப்பிடவில்லை.
ஆனால், சமூக ஊடகமான எக்ஸில் வெளியாகியுள்ள, உறுதி செய்யப்படாத மற்றொரு செய்தி, தான்யா, இம்மாதம், அதாவது, ஜூன் மாதம் 17ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.
தான்யாவின் திடீர் மரணம் அவரது குடும்பத்தில் அதிர்ச்சியையும் சோகத்தையும் உருவாக்கியுள்ளது