இலங்கை

TNL தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 32 வருடங்கள் நிறைவு

நாட்டின் முதல் தனியார் தொலைக்காட்சி ஊடக நிறுவனமாகக் கருதப்படும் TNL ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (21) 32 வருடங்கள் நிறைவடைகின்றன.

1993 ஜூன் 21ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட TNL தொலைக்காட்சியின் நிறுவனர் ஷான் விக்ரமசிங்க ஆவார்.

இவர் 1979 ஆம் ஆண்டு சுயாதீன தொலைக்காட்சியை நாட்டிற்கு வழங்கினார். மேலும் அது அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட சில வருடங்களுக்கு பிறகு TNL தொலைக்காட்சியை தொடங்கினார்.

சிங்களம் மற்றும் ஆங்கிலத்தில் செய்திகளை ஒளிபரப்பிய முதல் தனியார் தொலைக்காட்சி என்ற பெருமையைப் பெற்றுள்ள TNL, 1995 ஆம் ஆண்டு ‘ஜனஹட’ என்ற நிகழ்ச்சியின் மூலம் அரசியல் விவாதங்களுக்கும் முன்னோடியாகத் தொடங்கியது, அது அன்றிலிருந்து பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘ஆல் வேஸ் பிரேக்டவுன்’ மூலம் நகைச்சுவை மூலம் உள்ளூர் சமூகத்திற்கு அரசியல் யதார்த்தத்தை வெளியிட்ட டிஎன்எல், இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்து ரசிகர்களையும் கலைஞர்களையும் மகிழ்விக்க உதவிக்கரம் நீட்டியது.

1998 ஆம் ஆண்டு இசிர வானொலி தொடங்கப்பட்டதன் மூலம், அதனூடாக ஒரே நேரத்தில் பொதுமக்களுக்கு தகவல் மற்றும் பொழுதுபோக்கை வழங்கும் நோக்கம் விரிவுபடுத்தப்பட்டது.

அவற்றில் முக்கிய நிகழ்ச்சிகள் ‘நென பஹன’, ‘அமா தஹர’, ‘தர்ம வினிஷ்சய’, மற்றும் ‘தர்ம பிரதீப சதஹம் சாரிகா’ ஆகியவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

மேலும், ‘தி புத்திஸ்ட்’ மற்றும் ‘திதுல’ ஆகியனவும் TNL தொலைக்காட்சி மூலம் பார்வையாளர்களுக்கு நெருக்கமாக இருந்தன.

‘வைத்ய ஹமுவ’, ‘ரிதம் ராத்ரிய’ மற்றும் ‘பெதுரு பாடிய’ ஆகியவை இன்றும் பார்வையாளர்களின் நினைவை விட்டு நீங்காத நிகழ்ச்சிகளாகும்.

‘ரசானந்தா’ போன்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும், ‘நோபேனேன லோகாயா’ போன்ற மாயாஜால நிகழ்ச்சிகளும், ‘இசிவர இசவ்வ’ போன்ற ஜோதிட நிகழ்ச்சிகளும் மிகவும் பிரபலமான TNL தயாரிப்புகளாகும்.

பெண்கள் நிகழ்ச்சிகள் பலவற்றை திரைக்குக் கொண்டு வந்த இந்த தொலைக்காட்சி, ‘சிஹின நெலும் மல்’ என்ற குழந்தைகள் நிகழ்ச்சித் தொடர்களையும், சமையல் கலைகளுக்கான வாய்ப்புகளையும் வழங்கியது.

What's your reaction?

Related Posts

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

மத்திய ,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.ஊவா மாகாணத்தின் பல இடங்களிலும் அத்துடன் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலனறுவை மாவட்டங்களின் பல…