No products in the cart.
கனடாவின் ஆல்கொன்கின் தேசிய பூங்காவின் சிக்கியிருந்த தாய் மகன் மீட்பு
கனடாவின் கனடாவின் ஆல்கொன்கின் தேசிய பூங்காவின் சிக்கியிருந்த தாய் மற்றும் மகனை பாதுகாப்பாக மீட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூங்காவின் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கம்பிங் சென்றிருந்த ஒரு தாய் மற்றும் அவரது 13 வயது மகனை, கடும் இடியுடன் கூடிய புயலுக்குப் பிறகு மீட்புக் குழுவினர் காப்பாற்றினர்.
நார்த் டிபோ லேக் (North Depot Lake) அருகே ஞாயிற்றுக்கிழமை காலை இந்த மீட்பு நடவடிக்கை நடைபெற்றது.
கனடாவின் ஆல்கொன்கின் தேசிய பூங்காவின் சிக்கியிருந்த தாய் மகன் மீட்பு | 2 Campers Rescued From Algonquin Park
புயலின் போது, ஒரு மரம் அவர்களின் கூடாம் மீது விழுந்ததில், சிறுவன் கடும் காயங்களுக்கு ஆளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
“தாயார் ‘SOS’ அவசர சிக்னலை ஒரு சாதனத்தில் இயக்கியதன் மூலம், மீட்புப் படையினருக்கு அவர்களின் இருப்பிடத் தகவல் அனுப்பப்பட்டது” என தெரிவிக்கப்படுகின்றது.
வானிலை மோசமாக இருந்ததால் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு முடியவில்லை.
அதனால், மீட்பாளர்கள் மரங்களால் அடைத்த காடுகள் மற்றும் சிக்கலான பாதைகள் வழியாக 25 கிலோமீட்டர் பயணித்து, இருவரையும் மீட்டுள்ளனர்.
சிறுவனுக்கு முதலுதவி அளித்து, பின்னர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.