No products in the cart.
துஷார உபுல்தெனியவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்
சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, ஜூலை 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்தது தொடர்பான வழக்கு இன்று (25) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் மற்றும் பிரதிவாதி சார்பாக ஆஜரான ஜனாதிபதி வழக்கறிஞர் சரத் ஜெயமான்ன ஆகியோரின் வாதங்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.