சினிமா

நாயகன் வேற, தக் லைஃப் வேற!

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் மணி ரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டியில்,

“நானும் கமல்ஹாசனும் இணைந்து மீண்டும் ஒரு நாயகன் திரைப்படத்தை எடுக்க எங்களுக்கு எண்ணம் இல்லை. அத்தகைய படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுக்க விரும்பினோம்.

ஆனால் பார்வையாளர்கள் எங்களிடம் நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்” என கூறியுள்ளார்.

What's your reaction?

Related Posts

முதல் படத்திற்காக கற்றுக்கொள்ளும் முக்கிய விஷயம்

மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என தொடர்ந்து ஹிட் படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக கூலி திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம்…